Monday, 11 November 2013

விடுதலை நாள்! Tamil jokes

Shankaran Tirupur
திருமணமானவர்கள் *
கீழே உள்ள செய்தியைப்
படிக்கவேண்டாம்:
ஒரு பெண்மணி நடு இரவில்
தூக்கத்தில் எழுந்து தன்
கணவர் அருகில்
இல்லாததை உணர்ந்து அவரைத்
தேடினார்!.
வீடு முழுவதும் தேடி,
கடைசியில் அவர்
சமையலையறையில்
அமர்ந்திருந்ததை*க்
கண்டார்,
அவருக்கு முன்னால்
காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில்
சுவரை வெறித்துப்
பார்த்தபடி அமர்ந்திருந்தார
்.
இடையிடையே கண்ணில்
வழியும் கண்ணீரைத்
துடைத்தபடி காபியை அருந்திக்
கொண்டிருப்பதைக் *
கண்டார்.
மனம் பதைபதைத்து அவர்
அருகில் சென்று,
இதமாகக் கையைப்
பிடித்து, "என்ன ஆயிற்று?
இந்த நடு இரவில்
இங்கே வந்து தனியாக
அமர்ந்திருக்கிறீர்களே?"
என்று கேட்டார்.
கணவன்:
உனக்கு நினைவிருக்கிறதா
?
20
வருடங்களுக்கு முன்னால்
உனக்கு 18 வயதாகும்
போது நாம் இருவரும்
தனியாக பார்க்கில்
சந்தித்தோமே?
மனைவி: ஆமாம்,
நினைவிருக்கிறது.
கணவன்
(தொண்டை அடைக்கக்
கமறலுடன்): அன்று உன்
அப்பாவிடம் இருவரும்
மாட்டிக்கொண்டோமே?
ஆமாம் (கணவரின்
கண்களைத்
துடைத்து விடுகிறார்)
கணவன்: என்
நெற்றிப்பொட்டில்
துப்பாக்கியை வைத்து "மரியாதையாக
என் பெண்ணைத்
திருமணம்
செய்து கொள்கிறாயா?
இல்லை, 20 ஆண்டுகள்
உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?"
என்று உன்
அப்பா என்னைக்
கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா
?
மனைவி: அதுவும்
நினைவில் இருக்கிறது.
அதற்கென்ன?
கணவன் கண்களைத்
துடைத்தவாறு:
அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தா
ல்
இன்று எனக்கு விடுதலை நாள்!!!
# இதுக்கு அப்புறம்
விழுந்த அடி,
கேக்கவா வேணும்...

No comments:

Post a Comment